Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான்: மும்பையை இலக்கு வைக்கும் அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி!

சுமார் 2 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணுஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஷாகீன்-3  ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால்  மும்பை வரை தாக்கப்படும் அபாயமிருக்கிறது. ஆனால் இந்த ஏவுகணை எந்த இடத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் ராணுவம் அறிவிக்கவில்லை. தரையில் இருந்து ஏவப்படும் ஷாகீன் 3 ரக ஏவுகணை இதுவாகும்.

ஷாகீன் 3 ரக ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் மசார் ஜமில் இது குறித்து கூறுகையில், '' பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் விதத்தில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஏவுகணை திட்டத்தில் இது ஒரு அத்தியாயம்'' என்றார்.

இதற்கு முன் கடந்த மார்ச் 9-ம் தேதி இதே ரக ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ