Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு எதிரான ஆன்லைன் யுத்தம்!

லகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான ஆன்லைன் யுத்தத்திற்கு தேதி குறித்திருக்கிறது பிரபல ஹேக்கிங் இணையதளமான ‘அனானிமஸ்’ (Anonymous).

ஏற்கனவே ஐ.எஸ். அமைப்பின் பல்வேறு உறுப்பினர்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற இணையதள பக்கங்களை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியதோடு மட்டும் இல்லாமல் அவற்றை ஹேக் செய்திருக்கும் இந்த ‘அனானிமஸ்’ இப்பொழுது அறிவித்திருப்பது ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான “உலகின் உச்சக்கட்ட கோப வெளிப்பாட்டு நாள்” (#OpDayofRage).

இதற்காக வரும் டிசம்பர் 11-ம் தேதியைக் (இன்று) குறித்து வைத்திருக்கும் இவர்கள்,  அந்த நாளில் உலக நெட்டிசன்கள் அனைவரும்,  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரை அவமதிக்கும் வண்ணம்  ட்ரால்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் அப்லோட்  செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ஐ.எஸ். அமைப்பினரின் அக்கவுண்ட்களை கண்டறிந்து,  அவற்றை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டவும் வேண்டுகோள் விடுக்கின்றது இந்த ‘ஹேக்டிவிஸ்ட்’ இணையதளம்.

இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது இருக்கும் உலக மக்களின் பயமின்மையையும், அவர்களை எதிர்க்கத் துணிந்தவர்களும் உலகில் உள்ளனர் என்ற நிலைப்பாட்டையும் அந்த அமைப்பினர் மத்தியில் விதைக்க நினைத்திருக்கிறது ‘அனானிமஸ்’.  சார்லீ ஹெப்டோ நிகழ்வுக்குப் பிறகு ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான #OpIsis என்ற முழக்கத்தை முழங்கி,  பல ஐ.எஸ். அமைப்பினரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்ததும், ஒரு வயாகரா விளம்பரத்தைக் கொண்டு அவர்களின் ஒரு வெப்சைட்டையே முடக்கியதும் இந்த ‘அனானிமஸ்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீப காலமாக மேலை நாடுகளில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். மோகத்தால் பல இளைஞர்கள் அந்த அமைப்பின் வசம் வீழ்ந்துவிடுகிறார்கள். தமிழக இளைஞர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய ஹேக்டிவிஸ்ட் உலக மக்களின் துணிச்சலைக் காட்டுவதோடு மட்டும் இல்லாமல், ஐ.எஸ். மோகத்தை பெருமளவில் குறைக்க வழி செய்கிறது.

இதற்கான வழிமுறைகளாக சிலவற்றை பட்டியலிடுகிறது இந்த இணையதளம்.

* ஐ.எஸ். அமைப்பை வெறுப்பவர்களை குறிக்கும் வார்த்தையான தேஷ் (Daesh) என்பதைக் குறிக்கும் வகையில் #Daesh மற்றும் #Daeshbags ஆகிய ஹேஷ்டேக்குகளை பரப்புதல்.

* ட்விட்டர் , ஃபேஸ்புக் , இன்ஸ்டாக்ராம் ஆகியவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரை கேலி செய்யும் விதமான போஸ்ட்களை அப்லோட் செய்தல்.

* #Daesh மற்றும் #Daeshbags ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்குதல்.

* பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் புகைப்படங்களை ஷேர் செய்து அவர்களை கிண்டல் செய்வது.

* ஐ.எஸ். அமைப்பினர் உபயோகப்படுத்தும் ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் பரப்பி அவற்றை கேலிக்குள்ளாக்குவது.

* யூடியூபில் ஐ.எஸ். அமைப்பினரை கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவு செய்தல்.

* ஐ.எஸ். அமைப்பினரை கிண்டல் செய்யுமாறு புகைப்படங்களையோ ஸ்டிக்கர்களையோ உங்கள் ஊரில் பரப்புதல்.

ஒரு யுத்தத்தையே தொடக்கி வைத்திருக்கும் இவர்களின் நிலைப்பாடுதான் என்ன?

"அவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்று நாம் அவர்களுக்கு காட்டுவோம்" என்பதையே பதிலாக வைத்திருக்கிறது இந்த அனானிமஸ்!

-ஸ்ரீ.தனஞ்ஜெயன் (மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ