Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சவுதி பெண்கள் வாக்களிக்கலாம், ஆனால்....

ஸ்லாமிய சட்டத்திட்டங்கள் அமலில் இருக்கும் சவுதி அரேபியாவில், முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் நகராட்சி தேர்தலில்  5 ஆயிரம் ஆண்களும் 980 பெண்களும்  போட்டியிட்டுள்ளனர். சவுதியை பொறுத்தவரை நகராட்சி தேர்தலில் மட்டும்தான் அந்த நாட்டு குடிமகன்கள் வாக்களித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும்.
 

இந்த தேர்தலை பொறுத்தவரை களமிறங்கியுள்ள பெண்கள் எந்த முன் அனுபவமும் இல்லாமல் களமிறங்குதால், பெரும்பாலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் வாக்களிக்கவுள்ளனர். அந்நாட்டு சட்டப்படி சவுதி பெண்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

உலகிலேயே சவுதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லாத நாடு

குடும்பத்தில் ஆண் உறுப்பினர் அனுமதி இல்லாமலோ துணைக்கு ஆண் உறுப்பினர் பாதுகாவல் இல்லாமலோ பெண்கள் வெளியே செல்லக் கூடாது

தந்தை அனுமதியில்லாமல் யாரையும் விருப்பப்படி  திருமணம் செய்து கொள்ள முடியாது.

பொது இடங்களில் தலை முதல் காலை வரை மறையும்படி பர்தா அணிந்துதான் வெளி வர முடியும். ஆண்களுக்கு முன்னால் எப்போதும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில பணிகளில்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ரெஸ்டாரன்ட் உள்ளிட்ட இடங்களுக்கு அறிமுகமில்லாத ஆண்களுடன் செல்லக் கூடாது.

ஆண்கள் நினைத்தால் எந்த நேரத்திலும் விவகாரத்து செய்ய முடியும்

சவுதியில் முனிசிபல் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

அமைச்சரவைக்கு அறிவுரை கூறக் கூடிய சுரா கவுன்சிலில் பெண்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக செயல்படலாம்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரியலாம். வழக்கறிஞர்களாகவும் பணி புரியவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பெண்கள் திருமணத்தை பொறுத்த வரை எந்த வயது வரம்பும் கிடையாது. அதனால் இளம் வயதிலேயே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ