Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த சர்வதேச உடன்படிக்கை தாக்கல்!

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச உடன்படிக்கை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்ளவும், அதனை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தவும் இந்த உடன்படிக்கையில் வழி காணப்பட்டுள்ளது.
 

புவி வெப்ப அளவை ஒன்று புள்ளி ஐந்து டிகிரி செல்சியஸூக்குள் கட்டுப்படுத்துவது இலக்காக கொள்ளப்பட்டுள்ளது என்றாலும், இது இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளைக் கட்டுப்படுத்தாது என உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இந்த சர்வதேச பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உடன்படிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 31 பக்கங்கள் கொண்ட இந்த உடன்படிக்கையை தாக்கல் செய்த பிரான்ஸ், உலக நாடுகள் இதனை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

உடன்பாட்டில், உலக வெப்பமயமாதலை வளர்ந்து வரும் நாடுகள் சமாளிக்க 2020–ம் ஆண்டில் இருந்து வருடத்துக்கு 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் கோடி) நிதி திரட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்ட உடன்பாட்டை 196 நாடுகள் ஏற்றுக் கொண்டது. கடும் விவாதத்திற்கு பின்னர் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரான்ஸ் அமைச்சர் தாக்கல் செய்த உடன்பாடு வரலாற்று சிறப்பு மிக்கது என்று உலக நாட்டு தலைவர்களால் பராட்டப்பட்டுள்ளது.

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு, நல்ல எதிர்காலத்திற்கான படியாகும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார். 

வரலாற்றுச் சிறப்பு மிக்க உடன்படிக்கை இது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நாம் வாழும் பூமியை காப்பாற்ற நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இதனை வரவேற்றுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ