Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சவுதி தேர்தல்: ஒரே ஒரு பெண் வெற்றி!

ஸ்லாமிய சட்டத்திட்டங்கள் அமலில் இருக்கும் சவுதி அரேபியாவில், முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் நகராட்சி தேர்தலில்  6 ஆயிரத்து 640 ஆயிரம் ஆண்களும் 900 பெண்களும்  போட்டியிட்டுள்ளனர். சவுதியை பொறுத்தவரை நகராட்சி தேர்தலில் மட்டும்தான் அந்த நாட்டு குடிமகன்கள் வாக்களித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும்.

இன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் மெக்கா நகரில் மத்ராக் என்ற பகுதியில் போட்டியிட்ட ஒரே ஒரு பெண் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். சல்மா பிந்த் ஹிசாப் அல் குதாபி என்ற பெயர் கொண்ட அந்த பெண், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 7 ஆண் வேட்பாளர்களையும் இரு பெண் வேட்பாளர்களையும் தோற்கடித்துள்ளார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ