Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிறக்கும் போதே கின்னஸ் சாதனை நிகழ்த்திய குழந்தை!

ணின் விந்தணு 23 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு, அதற்கு பிறகு செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றது கின்னஸ் சாதனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அலெக்ஸ் பாவெல், இவருக்கு 15 வயதாக இருக்கும் போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு கதிர்வீச்சு முறையிலான சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் கதீர்வீச்சு முறையிலான சிகிச்சை முறை, ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை  பாதிக்கும் என்பதால், அலெக்ஸ் பாவெல் தனது விந்தணுவை எடுத்து பாதுகாப்பு மையத்தில் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த அலெக்ஸ் பாவெல், வீ என்பவரை திருமணம் செய்தார். கடந்த ஆண்டு  இந்த தம்பதியர் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து வீ யின் கருமுட்டையுடன் அலெக்ஸ் பாவெலின் விந்தணு செயற்கை கருத்தரித்தல் முறையில் சேர்க்கப்பட்டது. 

இதையடுதது  கடந்த ஜுன் 17-ம் தேதி வீ ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சேவியர் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, உலகிலேயே அதிக ஆண்டுகள் பாதுகாத்து வைக்கப்பட்ட  விந்தணுவால்  பிறந்த குழந்தை என்ற புகழ் சேவியருக்கு கிடைத்துள்ளது.  கின்னஸ் புத்தகத்திலும் சேவியரின் பெயர் இடம் பெற்றுள்ளது.  இதற்கு முன் ஆணின் விந்தணு  21 ஆண்டுகள் வரை  பாதுகாக்கப்பட்டதே சாதனையாக இடம் பெற்றுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ