Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளி கைது: பரபரப்பு தகவல்கள்!

பாரீஸ்: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக விளங்கிய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு கொடூரமான முறையில் 7 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இசையரங்கு மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில்   தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பிரான்ஸ் நாடு நிலை குலைந்தது. இதனால் பாரிஸின் எல்லைகள் மூடப்பட்டன. நாடு முழுக்க பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டன.

இந்தக் கொடூர தாக்குதல்களில் 130 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.பின்னர் இந்தத் தாக்குதல் ஐ.எஸ். இயக்கத்தால் நடந்தது என்று தெரிய வந்தது.

இது தொடர்பாக பிரான்ஸ் அரசு நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரான்ஸ் தனது ராணுவ தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் என கூறப்படுகிற 29 வயது நபர், பாரீஸ் நகரத்தில்  கைது செய்யப்பட்டார். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பாரீஸ் தாக்குதல் தொடர்பாக நடந்து வருகிற விசாரணையில், இதுவரை 2,700 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதும், 360 பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ