Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: அமெரிக்காவில் 900 பள்ளிகள் மூடல்!

நியூயார்க்: தாக்குதல் நடத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததையடுத்து அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 900 பள்ளிகள் மூடப்பட்டன.இந்த மிரட்டலைத் தொடர்ந்து  லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து  மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,   "அமெரிக்கர்களையும் அமெரிக்காவையும் தீவிரவாதிகள் ஆட்கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பள்ளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தாக்குதல் மிரட்டல் வந்துள்ளது. அதில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் போன்று இன்னொரு தாக்குதலை பள்ளிகளில் நடத்த உள்ளதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நியூயார்க்கில் உள்ள பள்ளிகளுக்கும் இதே போன்ற மிரட்டல் வந்ததாகவும்,அது  அச்சுறுத்தல் மட்டுமே என்றும் நியூயார்க் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ