Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். அமைப்பினரை ஊக்கப்படுத்தும் அந்த செயல் வேண்டாம்: மலாலா வேண்டுகோள்

லண்டன்: உலக அளவில் தீவிரவாதம் பரவியுள்ள சூழலில், முஸ்லிம்கள் மீது மட்டும் பழி போடுவது ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பினருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிடும் என்று நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டின் இளம்பெண் மலாலா கருத்து  தெரிவித்துள்ளார். 

" பாரீஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரசாரம் பெருகி வருகின்றது. இது தீவிரவாதிகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்து விடக்கூடும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாகப்பேச, பேச நாமே அதிகப்படியான தீவிரவாதிகளை உருவாக்கி விடுவதுபோல் அந்த பேச்சுக்கள் அமைந்துவிடும்.  

அரசியல்வாதிகள் எதையும் சிந்தித்துப்  பேச வேண்டும். உங்களது குறிக்கோள் தீவிரவாதத்தை ஒழிப்பது என்றால், தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குற்றம் சொல்ல முயற்சிக்காதீர்கள். இதைப் போன்ற பேச்சுகளால் மட்டுமே தீவிரவாதத்தை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது"  என்று மலாலா தெரிவித்துள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்