Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரேலியாவில் பயங்கர சூறாவளி: வீடுகள், சாலைகள் சேதம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான அபூர்வ சுறாவளி வீசியது. அதனைத் தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தால் வீடுகள், கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும்  கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சாலைகளில் ஓடினர்.

சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம் மற்றும் புறப்பட்டு செல்லும்  விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிட்னி நகரில் இன்று மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக  சூறாவளி வீசியதால்  மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீடுகள், கட்டடங்களின் கூரைகள் பறந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close