Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை வரலாற்றில் இப்படியொரு அதிபரா? (வீடியோ)

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் அமர்ந்து சகஜமாக பேசியிருப்பது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.


இலங்கையில் நடந்து முடிந்த போருக்கு பின்னர் இன்னும் ஏராளமான தமிழ் மக்கள்  முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். சிலர் மட்டுமே சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் சென்ற அதிபர் மைத்திரிபால சிறிசேன, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டது அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அதிபர் இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ