Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போரால் இடம் பெயர்ந்த தமிழர்கள் 6 மாதத்தில் மீள்குடியேற்றம்: சிறிசேனா

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரால் இடம் பெயர்ந்த தமிழர்கள் இன்னும் 6 மாதத்தில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று அதிபர் சிறிசேனா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசும்போது, ''வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைத்துள்ளதாக என் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் அங்குள்ள நிலைமையை நேரில் வந்து பார்க்கட்டும்.

தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் தற்போது இல்லை. ராஜபக்சே அரசு, போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தினாலும் போருக்கான காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளது. உண்மையான சமரச தீர்வு எட்டப்படவில்லை.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில், ஏராளமான தமிழர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியறி உள்ளனர். தற்போது அவர்கள் மிக மோசமான நிலையில் வசித்து வருகின்றனர். நான் அவர்களின் வீடுகளுக்கு சென்றபோது, அதை என்னால் உணர முடிந்தது.

அதனால், இடம்பெயர்ந்த தமிழர்களை அடுத்த ஆறு மாதங்களில் அவர்களது சொந்த இடங்களில் மறுகுடியமர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 'அதிபர் அதிரடி படை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்த அமைப்புடன், அரசு அதிகாரிகள், ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ