Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்த காதலன்!

இங்கிலாந்தில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு,  ஆஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்து வந்துள்ளார் காதலன்.
 

இங்கிலாந்தின் ஹார்விச் பகுதியில் குடியிருக்கும் ஜிம்மி ஹெயில்வுட் என்பவர்,  ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் ஹெயில்வுட் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த சைக்கிள் பயணத்தின் இடையே, தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் சேகரிக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து விமானம் மூலம் பாலியின் டின்பாசர் பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்து இந்தியா வரை சைக்கிளில் கடந்துள்ளார்.
 

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து மீண்டும் பிஷ்ஹி பகுதிக்கு விமானத்தில் புறப்பட்ட ஹெய்ல்வுட், அங்கிருந்து சைக்கிளில் இங்கிலாந்தின் ஹார்விச் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார். இந்த பயணத்தின் இடையே 17,000 பவுண்டுகள் நிதி சேகரித்த அவர்,  அதனை லாங்கஷர் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.

ஹெயில்வுட் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உடன் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று என தெரிவித்துள்ள அவரது காதலி ஆஸ்டன், குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு 12,000 மைல்கள் சைக்கிளில் பயணம் செய்துள்ளது கடினமான முயற்சி என்றபோதும், இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close