Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாற்பது ஆண்டுகளுக்கு பின் நடந்த அழகிப்போட்டி: 20 வயது மாணவி மிஸ். ஈராக் ஆனார்!

டந்த 1972-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றது.  20 வயது மாணவி மிஸ். ஈராக் அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

பாக்தாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் 150 பேர் பங்கு கொண்டனர். இதில் கிர்குக் பகுதியை சேர்ந்த  ஷ்யேமா அப்துல்ரகுமான் என்ற பொருளாதார மாணவி,  மிஸ். ஈராக்காக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இறுதி சுற்றுப் போட்டிகள் பஸ்ரா நகரத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் சில அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து போட்டி நடுவர் உள்பட 15 பேர் போட்டியில் இருந்து விலகினர். தொடர்ந்து இறுதிச் சுற்று போட்டிகள் பாக்தாத் நகருக்கு மாற்றப்பட்டது.

மிஸ். ஈராக்காக தேர்வு செய்யப்பட்ட ஷ்யேமா கூறுகையில், ''இது அழகிப் போட்டியோ பேஷன் பரேடோ அல்ல. ஈராக்கின் அனைத்து இளைஞிகளுக்கும் இந்த அனுபவம் கிடைக்க வேண்டும். எனது பெற்றோரும் முதலில்  தடை விதித்தனர். அவர்களை சமாதானப்படுத்தி போட்டியில் பங்கேற்றேன்'' என தெரிவித்தார்.


 

எடிட்டர் சாய்ஸ்