Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க விரும்பவில்லை: புதின் உறுதி!

மாஸ்கோ: பிரிந்த நாடுகளை இணைத்து மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க விரும்பவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார்.ஆனால் இதனை மேற்கத்திய நாடுகள் நம்ப மறுக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின்  தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இது ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

புதின் மேலும் கூறுகையில், " உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனாகோவிச்,  ரஷ்யாவுக்கு ஆதரவாகச்  செயல்பட்டதாக அங்குள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவி விலகினார். இதனால் உக்ரைனில் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து புகார் கூறுகின்றன.

உக்ரைன் மற்றும் சில நாடுகள் முன்னாள் சோவியத் ரஷ்யாவில் இணைந்து இருந்தன. எனவே, அவற்றை மீண்டும் ஒன்றிணைத்து ‘சோவியத் ரஷ்யா’ உருவாக்க போவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை.

ஆனால் இதை யாரும் தற்போது நம்ப தயாராக இல்லை. உண்மையைக் கூறினால் நம்ப மறுக்கிறார்கள். ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும். ஆனால் அதை ஒரு போதும் பயன்படுத்தாது. அணு ஆயுத நாடாகிய ரஷ்யா தொடர்ந்து அதை மேம்படுத்தும்" என்று தெரிவித்தார்.

 பல ஆண்டுகளுக்குப் பிறகு புதின் சோவியத் யூனியன் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது அமெரிக்கா, இங்கிலாந்து  உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ