Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வருகிறது ஹிட்லரின் புத்தகம்!

70 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்லரின் 'மெயின் கெம்ப்' புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இதற்கு யூதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய எண்ணம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களுடன் 'மெயின் கெம்ப்'  என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். அவரது ஆட்சிக்காலத்தில் அப்புத்தகம் பரவலாக விற்பனையானது. இந்நிலையில் அவரது மரணத்துக்கு பிறகு அப்புத்தகத்தை விற்பதற்கு நேச நாடுகள் தடை விதித்தன.

மேலும் புத்தகத்தின் பதிப்புரிமை ஜெர்மனியின் பவாரியா மாகாணத்திடம் இருந்ததால்,  புத்தகத்தை மறுபதிப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது. எனினும் இணையதளங்களிலும்,  ஒரு சில நாடுகளிலும் இப்புத்தகம் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் புத்தகத்தின் 70 ஆண்டு கால காப்புரிமை இம்மாத இறுதியுடன் முடிவதால்,  'மெயின் கெம்ப்' புத்தகத்தை மறுபதிப்பு செய்து விற்பனைக்கு கொண்டு வர ஜெர்மனி முடிவு செய்துள்ளது. அந்நாட்டு பள்ளிகளிலும் இந்த புத்தகத்தை வைக்க பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் 'மெயின் கெம்ப்' புத்தகத்தை மறு பதிப்பு செய்யும் ஜெர்மனி அரசாங்கத்தின் கருத்துக்கு யூதர்களின் மத்தியக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த புத்தகம் வரும் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ