Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி (பதற வைக்கும் வீடியோ)

ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என  25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய ராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்தானது, மருத்துவமனையின் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த தளத்தில், அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளது என்று அவர் தெரிவிந்து உள்ளார்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த தீ விபத்து குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ