Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய கீதத்தை அவமதித்தாரா பிரதமர் மோடி? ரஷ்யாவில் பரபரப்பு!

புதுடெல்லி: அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி,  இந்திய தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷ்ய நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை கவனிக்காத பிரதமர் சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டார்.  உடனே அதனைக் கவனித்த அதிகாரிகள், அவரிடம் சென்று தேசிய கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறி அவரின் கையைப் பிடித்து திரும்ப அழைத்து வந்தனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே  சில நிகழ்வுகளில் தேசியக்கொடியை அவமதித்ததாக மோடி மீது சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ