Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிறிஸ்துமஸ் பண்டிகை: உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை இடமான வாட்டிகன் நகரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், போப் ஆண்டவர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்.

இந்த விழாவில் வாட்டிகனில் உள்ள கர்த்தினால்கள், பேராயர்கள், போதகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக போப் பிரான்சிஸ், வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. டெல்லியில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொப்பிகளை அணிந்து கொண்டு, தேவாலயங்களுக்கு வந்திருந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி, தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வழிபட்டனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் புனித ஆரோக்கிய மாதா தேவாலயம், நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கன்னி தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  நடைபெற்ற பிரார்த்தனைகளில் கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ