Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் மோடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஷ்ய அதிபர் புதின்!

ஆஸ்திரேலியா: 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற மோடிக்கு,  அந்நாட்டு அதிபர் புதின்,  மகாத்மா காந்தி தமது கைப்பட எழுதிய டைரியின் பக்கம் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கூடவே 18-ம் நூற்றாண்டில் வங்காளத்தில் பயன்படுத்தப்பட்ட வீர வாள் ஒன்றையும் மோடிக்கு அவர் பரிசளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் "கிரெம்ளின்' மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையேயான 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை செய்ததாக அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவளிக்கும் என்பதை மோடியிடம், புதின் உறுதிபடத் தெரிவித்தார்.  மேலும் கமோவ் - 226 என்ற வகை ராணுவ ஹெலிகாப்டர்களை இரு நாட்டு கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பின்னர், இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "பயங்கரவாதம் குறித்து இரு தரப்பும் கவலை கொண்டுள்ளது. குறிப்பாக, பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் இரட்டை வேடத்துக்கு எதிராக இணைந்து போராடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு மகாத்மா காந்தி தமது கைப்பட எழுதிய டைரியில் உள்ள பக்கம் ஒன்றின் நகலையும், 18-ம் நூற்றாண்டில் (ஒன்றுபட்ட) வங்காளத்தில் பயன்படுத்தப்பட்ட வீர வாள் ஒன்றையும் மோடியிடம் புதின் பரிசளித்தார். அதை வாஞ்சையுடன் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி புதினுக்கு நன்றி தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ