Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கள் இயக்கத்தில் சேராவிட்டால்... 'மிஸ் ஈராக்' அழகியை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள்!

பாக்தாத்: எங்கள் இயக்கத்தில் சேராவிட்டால் கடத்தி விடுவோம் என்று ‘மிஸ் ஈராக்’ பட்டம் வென்ற அழகிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈராக் நாட்டில் கடந்த 1972–ம் ஆண்டிற்கு பின் 43 ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் முதன் முறையாக ‘மிஸ் அழகி’ போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்க 200 பேர் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், தீவிரவாதிகளின் கொலை மிரட்டலை தொடர்ந்து 10 பேர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் போட்டியில் இருந்து விலகி கொண்டனர். அந்தப் போட்டியில், ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் ‘மிஸ் ஈராக்’ பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், அவருக்கு ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெலிபோனில் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது, ''எங்களது ஐ.எஸ். இயக்கத்தில் நீங்கள் சேர வேண்டும். அப்படி சேர மறுத்தால், உங்களை நாங்கள் கடத்துவோம்" என்று மிரட்டி இருக்கின்றனர். இந்தத் தகவலை ஈராக்கில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த மிரட்டல் குறித்து அழகி ஷாய்மா கூறும்போது, ''ஈராக் பெண்ணாகிய நான் எனது சமூகத்தில்தான் வாழ்கிறேன். ஆண்கள் போல், பெண்களுக்கும் வாழ உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை என நம்புகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ