Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்கன் நாடாளுமன்ற புதிய கட்டடத்தை மோடி திறந்தார்!

காபூல்: ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆப்கன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்திய நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தை இன்று திறந்து வைத்தார்.

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் இன்று காலை ஆப்கான் தலைநகர் காபூல் சென்றடைந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அத்மர், ஆப்கன் துணை வெளியுறவு அமைச்சர் ஹெக்மத் கலில் கர்சாய், ஆப்கனுக்கான இந்திய தூதர் அப்தலி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து அதிபர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை, ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி நேரில் வரவேற்றார். அப்போது, ஆப்கன் அரசு சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஆப்கன் நாடாளுமன்ற கட்டட வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு தாலிபான்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நட்புறவு மலரத் தொடங்கியது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கட்டமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவிசெய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியா 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டி உள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் கீழ்-சபை, மேல்-சபை மற்றும் கலந்துரையாடல் கூடம் ஆகியவை இடம்பெற்று உள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான இன்று இந்த புதிய கட்டடத்தை திறந்து வைக்கப்பட்டு உள்ளதுடன், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ‘அடல் பிளாக்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close