Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டது!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்திய தலை நகர் டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளைவிட்டு வெளியே வந்தனர்.

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூர் உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஜெனரல் குலாம் ரசூல் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஆப்கானிஸ்தானில் 196 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. லாகூர், செய்குபுரா, நன்கனா எஸ்சாகிப், பைசலாபாத், சர்கோதா, செய்குபுரா முல்தான், சக்வால். லோத்ரன், சியல்கோட், குஜராத், முரீ, பெஷாவர், மலாகண்ட்,சர்சடா, மன்சக்ரா, ஸ்வாட், மற்றும் தெற்கு வஜீரிஸ்தான் என்று பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நில நடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு உண்டான இந்த நில அதிர்வு, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும், புதுடெல்லி, காஷ்மீர்  உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளிலும் 2 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close