Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலையை வெட்டி பார்வைக்கு வைத்த ஆப்கான் தீவிரவாதிகள்!

ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 பேரின் தலையை துண்டித்து அங்குள்ள பிரதான சாலையில் மக்களின் பார்வைக்கு வைத்தனர் ஆப்கான் தீவிரவாதிகள்  என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள அச்சின் மாவட்டத்தில், உள்ளூர் கிராம தீவிரவாத குழுவினருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆப்கான் தீவிரவாதிகள், ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 பேரின் தலையை துண்டித்து அங்குள்ள பிரதான சாலையில் மக்களின் பார்வைக்கு வைத்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்து உள்ளனர்.

ஆப்கான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஹஜி சகிர் என்பவரின் ஆதரவாளரான இவர்கள், கடந்த சில வாரங்களாக தலிபான் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ