Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 800 குழந்தைகள்: காரணம் என்ன?

யர்லாந்தில் தனியாருக்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் ஒன்றில் 800 குழந்தைகள் வரை அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

அயர்லாந்தின் கால்வே மாகாணத்தில் செயல்பட்டு வந்த சிறுவர் இல்லம் ஒன்றில்,  ஜூலியா தேவானே என்பவர் பணியாளராக இருந்து வந்துள்ளார். அந்த இல்லம் கடந்த 1961-ம் ஆண்டு மூடப்படும் வரை அங்கு பணியாற்றிய இவர், தாம் இறக்கும் முன்னதாக பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாமல் கருத்தரிக்கும் பெண்களுக்காகவே அயர்லாந்தின் கால்வே மாகாணத்தில் இந்த இல்லம் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக சிக்கல்களில் இருந்து தப்பிக்க,  பெரும்பாலான திருமணமாகாத பெண்கள் தங்கள் குழந்தைகளை திருமணமாகாத பெண்களால் நடத்தப்படும் இந்த இல்லத்தில் ஒப்படைத்து வந்துள்ளனர்.

இந்த இல்லத்தில் குழந்தைகளை பராமரிக்கும் பொருட்டும்,  உள்ளூர் சந்தைகளில் பொருட்களை வாங்கி வரவும் பணியாளராக தமது 9 வயதில் சேர்ந்துள்ளார் ஜூலியா.

சமூக சேவையாக இந்த இல்லம் நடத்தப்பட்டாலும் பொருளாதார சிக்கல் காரணமாக குழந்தைகளை சரிவர பராமரிக்க அவர்களால் இயலாமல் போயுள்ளது. இதனால் பலசமயங்களில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டும்  பட்டினியாலும் உயிரிழக்கும் நிலையும் உருவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

பெரும்பாலான குழந்தைகளை அங்குள்ள பெண்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுகளில் இருந்து வரும் தம்பதியர்களுக்கு தத்துக்கொடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

போதிய உணவு இன்றியும் நோயினால் அவதியுற்று இறக்கும் குழந்தைகளை,  அந்த இல்லத்தின் அருகாமையில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்து வந்துள்ளதாக ஜூலியா தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

1925 முதல் அந்த இல்லம் மூடப்படும் 1961-ம் ஆண்டுவரை,  சுமார் 800 குழந்தைகளின் உடல்கள் குவியலாக அந்த தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு விசாரணை ஆணைக்குழு ஒன்றினை அமைத்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் உள்ள வரலாற்று ஆய்வாளர் ஒருவர், இந்த சிறுவர் இல்லம் குறித்து மேலும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close