Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொட்டிய கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

லண்டன்: இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் ஒரே நாளில் கனமழை கொட்டியதால் சாலைகளில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்ஷயர், லங்காஷயர் ஆகிய மாகாணங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்கிலாந்தின் கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

வெள்ளப்பெருக்கால், சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. நதிக்கரைகளில் இருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும்  கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக இங்கிலாந்தின் வானிலை மைய அதிகாரிகள்  கூறுகையில், " நாட்டின் சில  பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை,  கடந்த  ஒரே நாளில் (சனிக்கிழமை) பெய்துள்ளது, இதுவே வெள்ளப் பெருக்குக்கு காரணம்"  என்று தெரிவித்துள்ளனர்.

கனமழையால் சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்குப் பகுதிகளில் கடும் புயல் வீசுவதால் மிசோரி, இலியோனிஸ், டெக்சாஸ், நியூமெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாகக்   கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மிசோரி மாகாணத்தில் புயலின்  பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கனமழைக்கு இதுவரை 43 பேர் உயிரிழந்திருப்பதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close