Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு: நாசா வெளியிட்ட அரிய வீடியோ!

செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த நிலச்சரிவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தின் நிகழ்வுகளை கண்காணித்து படம் பிடிப்பதற்காக, Mars Reconnaissance Orbiter என்ற செயற்கைக்கோளை கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அனுப்பியது.

அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமரா,  செவ்வாயின் நிலப்பரப்பை படம் பிடித்து அனுப்பி வருகிறது. அந்த செயற்கைக்கோள் தொடர்ந்து அனுப்பி வரும் புகைப்படங்களை நாசா ஆராய்ந்து வருகிறது.

அப்போது, செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை, அந்த செயற்கைக்கோள் படம் பிடித்திருப்பதை நாசா உறுதி செய்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ