Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்கேட்டிங் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்ட பாதிரியார் சஸ்பெண்ட்!(வீடியோ)

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில், கிறிஸ்துமஸ் நாளன்று அங்குள்ள சான் பாப்லோ மறை மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில்,  ஸ்கேட்டிங் பலகை மூலம் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாதிரியார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சஸ்பெண்ட் ஆன பாதிரியாரின் பெயர் ஆல்பர்ட் சான் ஜோஸ். கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனையில் ஸ்கேட்டிங் பலகை மூலம் நகர்ந்தவாரே தேவாலயத்தில் சொற்பொழிவு ஆற்றினார். இது கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்தக் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட நிர்வாகம்  பாதிரியாரை தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

வீடியோ லிங்க் ....

                 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ