Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லண்டன் மியூசியத்தின் வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கான விருது அறிவிப்பு

வ்வொரு வருடமும் லண்டன் இயற்கை வரலாற்று மியூசியம், சிறந்த வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கு  விருது வழங்கி கவுரவப்படுத்துவது வழக்கம். இணையத்தில் வாக்களித்து  மக்களே சிறந்த வனஉயிரின புகைப்பட கலைஞர்களை தேர்வு செய்வார்கள். அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞருக்கான விருது கனடாவை சேர்ந்த டான் கடோஸ்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கனடாவின் வபூஸ்க் தேசிய பூங்காவில் மைனஸ் 30 டிகிரி குளிரில் சிவப்பு நரி ஒன்று ஆர்டிக் நரியை வேட்டையாடுவது போன்ற இந்த படத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கேனான் ஈஓஎஸ் 1 டி கேமராவில் 400 எம்.எம். லென்சை பயன்படுத்தி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதே வரிசையில் நமீபியாவில் எடுக்கப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள் படம் 2வது இடத்தை பெற்றுள்ளது. இதனை ஸ்பெயின் புகைப்பட கலைஞர் மரினா கானோ எடுத்துள்ளார்.

சிறந்த இளம் புகைப்படக்காரருக்கான விருது செக்குடியரசுவை சேர்ந்த ஆன்ட்ரெஜ் பிலானெக்கிற்கு கிடைத்துள்ளது. நார்வேயில் இவர் எடுத்த பறவைகள் புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் நிகான் 800 கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

பறவைகள் வரிசையில், இஸ்ரேல் புகைப்பட கலைஞர் அமீர் பென் டோவ் எடுத்த செந்நிற கால்களுடைய ஃபால்கான்ஸ் பறவைகள் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் கேனான் ஈ.ஓ.எஸ். 1டி எக்ஸ் கேமராவில் 500  எம்.எம்.லென்ஸ் பயன்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

பறவைகள் பிரிவில் இங்கிலாந்து புகைப்பட கலைஞர் சார்லஸ் ஹாமில்டன் ஜேம்ஸ் எடுத்த ஆப்ரிக்க கழுகுகள் இறை உண்பது போன்ற புகைப்படம் 2வது இடத்தை பிடித்தது. இந்த படம் பானாசானிக் லூமிக்ஸ் ரக கேமரா பயன்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன வரிசையில் நெதர்லாந்தை சேர்ந்த எட்வின் ஜிஸ்பெர்ஸ் என்ற புகைப்பட கலைஞருக்கு  விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது புகைப்படங்கள் பி.பி.சி. இதழ் மற்றும் நேஷனல் ஜியோகிராபி புத்தகங்களில் அடிக்கடி இடம் பெறுபவை.

முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் வரிசையில், இத்தாலி புகைப்பட கலைஞர் யூகோ மெலோனி எடுத்த இந்த வண்ணத்துப்பூச்சி படம் பெறுகிறது.

தாவரங்கள் வரிசையில் ஆஸ்திரிய புகைப்பட கலைஞர் எடுத்த ஜார்ஜ் பாப் எடுத்த, ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த சைப்ரஸ் செடி புகைப்படம் பெறுகிறது. அமெரிக்காவில் லுசியானா மாகாணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடல் வாழ் உயிரினங்கள் வரிசையில், ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் மிக்கேல் ஏவால் எடுக்கப்பட்ட, திமிங்கலத்தின் வாயிற்குள் குட்டி மீன்கள் செல்வது  போன்ற இந்த புகைப்படத்துக்கு கிடைத்துள்ளது.

அழகிய மலைகள் வரிசையில், ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று குழம்பு வெளியேறிய நிலையில் சாம்பல் படலத்துடன் காணப்படுவது  போன்ற இந்த புகைப்படத்துக்கு கிடைத்துள்ளது. இதனை ஸ்வீடன் புகைப்பட கலைஞர் ஹேன்ஸ் ஸ்ட்ரேன்ட் எடுத்துள்ளார்.

வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரிசையில், ஸ்பெயின் புகைப்படக் கலைஞர் ஃபேர் சோலரால் எடுக்கப்பட்ட ,பாகியா டி ஸ்காடிஸ் வன உயரின பூங்கா படத்துக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த தாமஸ்விஜயன் எடுத்த லங்கூர் குரங்குகள் குடும்பம் படமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பெரிய குரங்குகளின் வாலில் குட்டி குரங்கு ஒன்று தொங்கி கொண்டு ஊஞ்சலாடுவதை போன்ற அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் விருதுக்கு தேர்வாகவில்லை. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ