Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய சிறைகளில் இருந்து 189 பாக். கைதிகளை காணவில்லை என்கிறது பாகிஸ்தான்!

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லெண்ண அடிப்படையில் நேற்று சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இந்திய சிறைகளில் இருந்து 189 பாகிஸ்தான் கைதிகளை காணவில்லை என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லெண்ண அடிப்படையில் கடந்த 2008 மே 31-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட தூதரக அளவிலான ஒப்பந்தப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்று மற்றும் ஜூலை 1-ம் தேதி இருநாட்டு சிறைகளிலும் உள்ளவர்களை பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ஜனவரி 1-ம் தேதியான நேற்று, சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி இருதரப்பிலும் வழக்கமான முறையில் சிறையில் உள்ள மற்றநாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறினர். இதில், இந்திய தரப்பில் முரண்பாடு உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. 17 மீனவர்கள் உட்பட 271 பாகிஸ்தான் கைதிகள் சிறைகளில் உள்ளதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் தரப்பில் 460 கைதிகள் இந்திய சிறைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 113 மீனவர்களும் இந்திய சிறைகளில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் 189 கைதிகள் காணவில்லை என்பது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இருநாடுகளுக்கு இடையேயான வெளியுறவுச் செயலாளர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை வருகிற ஜனவரி 25-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கைதிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் பேச பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

மோடியின் லாகூர் பயணத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் தற்போது புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கைதிகள் காணவில்லை என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close