Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு நாட்டை துரத்தும் துரதிர்ஷ்டம்! (வீடியோ)

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆவிகளை விரட்ட,  பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஆயிரம் குடிசை வீடுகள் தீக்கிரையானது. 


பிலிப்பைன்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துரதிஷ்டத்தை துரத்தும் சடங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சடங்கில் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை கொளுத்தி,  அந்த ஆண்டில் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டத்தை பொதுமக்கள் துரத்தி வந்துள்ளனர்.

இந்த ஆண்டும் வழக்கமான அரசின் அறிவுறுத்தல்களுக்கு இடையே, கோலாகலமாக துவங்கியுள்ளது பட்டாசு கொளுத்தும் இந்த சடங்கு. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற இந்த சடங்கில்,  சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களின் துரதிஷ்டத்தை துரத்தி புத்தாண்டை வரவேற்க ஒன்று திரண்டனர்.

திரளான மக்கள் ஒன்று திரண்டு போட்டியிட்டு பட்டாசு கொளுத்தியதில்,  தவறுதலாக கொளுத்தப்பட்ட ராக்கெட் பட்டாசு ஒன்று அருகாமையில் உள்ள குடிசைப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்த நெருப்பு படர்ந்து பற்றிக்கொண்டதில் அப்பகுதியில் உள்ள ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த களேபரத்தில் சிக்கி காயமடைந்த பொதுமக்கள் 380 பேருக்கும் அதிகமானோர்,  உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். தீக்காயங்களுடன் தப்பிய ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்வில் 850 பேர் படுகாயமடைந்து 200 குடிசை வீடுகள் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ