Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டில் 157 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

வுதி அரேபியாவில்,  கடந்த 2015-ம் ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிப்பட்டவர்களில், 157 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இதில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 63 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவை பொறுத்தவரை, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த மரண தண்டனையில்,  போதை மருந்து கடத்தலில் சிக்கி மரண தண்டனைக்குள்ளானவர்கள் 40 சதவீதம் ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு  போதை மருந்து கடத்தலில் சிக்கி மரண தண்டனை பெற்றவர்களை விட இது 4 சதவீதமே குறைவாகும்.

இதற்கு முன் கடந்த 1995-ம் ஆண்டு,  சவுதி அரேபியாவில் 192 பொது இடத்தில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதே  அதிக பட்சமாக இருந்தது.  தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ம் ஆண்டு அதிகபட்சமாக 157 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கடந்த ஆண்டு ஆயிரம் பேர் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக மரணத்தண்டனைக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் முதல் 6 மாதத்திற்குள் இஸ்லாமிய சட்டங்கள் அமலில் உள்ள நாடுகளில் 648 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் இரு பகுதியினர் போதை மருந்து கடத்தல் தொடர்பான விவகாரங்களில் தொடர்புடையவர்கள். 

கடந்த 1985-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சவுதி அரேபியாவில் 2 ஆயிரம் பேருக்கு தலை துண்டித்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கு மேலானவர்கள் வெளிநாட்டினர் ஆவார்கள்.

உலகிலேயே அதிக மரண தண்டனை விதிக்கப்படும் நகரங்களில்  தலைநகராக சவுதியின் ரியாத் உள்ளது. சவுதியின் இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் படி, தேசத் துரோகம், ஆயுதங்களை காட்டி கொள்ளையடிப்பது, கொலை, பாலியல் பலாத்காரம் , போதை மருந்து கடத்தல் போன்றவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

பெரும்பாலான மரணத் தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில்தான் நிறைவேற்றப்படுகிறது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதால், தலை துண்டிக்கப்பட்ட பின்னர், உடல் கழுமரத்தில் கட்டி தொங்க விடுவதும் வழக்கமான நடைமுறையில் உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close