Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய தகவல் : புதின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க கெஞ்சிய கடாஃபி!

லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி, தனது மகனை ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அணுகி அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்ரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த மம்மர் கடாஃபி, கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி படையினரிடம் பிடிபட்டு கொல்லப்பட்டார். இவர் தனது 2வது மகனுக்கு ரஷ்ய அதிபர் புதினின் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்தாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் மூலம் ரஷ்யாவுக்கும் தனக்குமுள்ள உறவு வலுப்பெறும் என்றும்,  அதனால் லிபியாவில் தானும் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருக்கலாம் என்று ஆசைப்பட்ட கடாஃபி,  இத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடாபிக்கு ஆலோசகராக இருந்த முகமது அல் ஹவுனி அல்  அளித்துள்ள பேட்டியில், ''புதின் மகள்களுள் ஒருவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க கடாஃபி அணுகினார். தனது மகனை, மருமகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கடாஃபி, புதினுக்கு  வேண்டுகோளும் விடுத்தார். ஆனால் புதின்,  'எனது மகள்களுக்கு உங்கள் மகனை யாரென்றே தெரியாதே...' எனக் கூறி, கடாஃபியின் முயற்சிக்கு முட்டுக் கட்டை போட்டு விட்டார்'' என தெரிவித்துள்ளார்.

மம்மர் கடாஃபி கொல்லப்பட்ட பிறகு, லிபியாவில் இருந்து தப்பி ஓட முயன்ற கடாஃபியின் மகன் சயீப் அல் இஸ்லாம், லிபிய புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு,  ஜிந்தன் என்ற நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ