Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இத்தனை கோடியா.... ஜாக்பாட் பரிசை இழந்த தம்பதி... நடந்தது என்ன?

கோடீஸ்வராகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் தவறவிட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர்,  லோட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு, அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர்.
 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லோட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளனர். அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லோட்டோ செயலி தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து சமர்ப்பித்துள்ளார்.

இதனிடையே குலுக்கல் தினத்தன்று ஜாக்பொட் அடித்த எண்கள் வெளியானபோது, நைலான் தம்பதியர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளனர். அவர்கள் தெரிவு செய்த எண்களுக்கே 35 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பு சுமார் ரூ.343 கோடி) ஜாக்பொட் அடித்துள்ளதாக லோட்டோ செயலி உறுதி செய்திருந்தது.

இதனையடுத்து உரிய நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களுக்கு ஜாக்பொட் அடித்திருப்பதாக தெரிவித்த டேவிட் நைலானுக்கு,  அவர்களின் பதில் பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. நைலான் தம்பதியர் லோட்டோ டிக்கெட் வாங்கியதற்கான எந்த பதிவும் அந்த நிறுவனத்தில் பதிவாகவில்லை என தெரிய வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் இடையே அந்த நிறுவனமும் இவர்கள் வாங்கிய டிக்கெட்டின் கணக்கை பதிவு செய்ய தவறியுள்ளனர். அதேபோன்று நைலான் தம்பதியர், லோட்டோ செயலி வாயிலாக வாங்கிய டிக்கெட்டை உறுதி செய்யவும் தவறியுள்ளனர். இதனால் கைக்கு எட்டிய ரூ.343 கோடி,  தங்களது கவனக்குறைவால் சில நிமிடங்களிலேயே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த தம்பதியினர் வேதனை அடைந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ