Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துபாயில் எரிந்த ஹோட்டல்... ஆட்டி படைத்த செல்ஃபி மோகம்!

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புர்ஜ் கலீபா கட்டடத்தின் அருகேயுள்ள 'தி அட்ரஸ்' என்ற ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்.

இந்த கட்டடம் தீ பற்றி எரிந்தபோது, அதன் பின்னணியில் செல்ஃபி எடுத்து கொண்ட தம்பதிக்கு இப்போது ட்விட்டரில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது. அவி பார் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.

''ஒரு கட்டடம் எரிந்து கொண்டிருக்கும் போது அதன் முன்னால் சிரித்துக் கொண்டு செல்ஃபி எடுப்பது முட்டாள்தனமானது, மடத்தனமானது'' என்று ஒரு ட்விட்டர் செய்தி சொல்கிறது.

''எத்தனை மக்கள் ஹோட்டலில் சிக்கியிருக்கிறார்கள். கொஞ்சமும் பதைபதைப்பு இல்லாமல் போஸ் கொடுக்கும் இவர்களை போன்ற முட்டாள்கள் வெட்கப்பட வேண்டுமென்று'' இன்னொரு ட்விட்டர் திட்டுகிறது.

இப்படி எரியும் ஹோட்டல் முன்பு செல்ஃபி எடுத்துக் கொண்ட இந்த தம்பதிக்கு  கண்டனம் குவிந்து வருகிறது.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close