Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவின் விஜயகாந்தா டொனால்டு ட்ரம்ப்?! - நான்கு அட்ரா சக்கை காரணங்கள்

மிழகத்தில் அன்புமணி ராமதாஸ்,  தனது போஸ்டர்களில் ஒபாமாவின் ஹோப் பிரச்சாரத்தை காப்பி அடித்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் நம்ம ஊர் விஜயகாந்தை போலவே நடந்து கொள்கிறார் என்றால் நம்புவீர்களா?
 
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில் அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ள டொனால்டு ட்ரம்ப்,  தனது பிரசாரங்களில் தேவையில்லாதா சர்ச்சைகளில் சிக்கி தனது ஆதரவை இழந்து வருகிறார். இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சொதப்பிய பல விஷயங்கள்,  நம் கேப்டன் விஜயகாந்தின் வேவ்லெங்த்துடன் செட் ஆகிறது. இருவருக்குமான கலாய் கலாட்டாக்கள் இதோ...
 
தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க !
 
டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்  விஜயகாந்த்,  தொலைகாட்சி நிருபரை பார்த்து,  "தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க...!"  என்றது தாறுமாறு வைரல்.
 
 
பிரசாரத்தின் போது தொடர்ந்து கேள்விகளை கேட்ட யுனிவிஷன் நிருபரை உட்கார சொல்லி கொண்டே இருந்த ட்ரம்ப், பின்னர் உதவியாளரை அழைத்து,  அந்த நிருபரை யுனிவிஷனுக்கு திரும்ப போகச் சொன்னது ( Go back to Univision ), தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கவை ஞாபகப்படுத்தியது.
 
 
இரண்டு பேருமே 'த்தூ'!
 
சமீபத்தில் விஜயகாந்த்,  பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'த்தூ'  என துப்பி வரம்பு மீறி நடந்து கொண்டார். 
 
 
அதேப்போன்று ட்ரம்ப் தனது பிரசாரத்தின் போது,  ஒரு பத்திரிக்கையாளரை இதேபோல் தரக்குறைவாக பேசி,  அவரைப் போல நடித்துக் காட்டி சர்ச்சைக்குள்ளானார்.

மீம் க்ரியேட்டர்களின் கதாநாயகன்!
 
விஜயகாந்தின் பேச்சு, அவர் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதங்கள் அனைத்துமே மீம்
கிரியேட்டர்களிடம் அல்டிமேட் வைரல்.
 
 
டிவி ஷோக்களில் சொதப்புவது, கூகுள் க்ரோமில் ட்ரம்ப்பை ப்ளாக் செய்யும் அளவுக்கு போனது டிரம்பும் அல்டிமேட் அட்ராசிட்டிகளுக்கு பெயர் போனவர்தான். 
 
எதிர்க்கட்சிகள்தான் காரணம்!
 
திருச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த், தமிழக மக்கள் பிரச்னையில் தி.மு.க, அ .தி.மு.க கட்சிகள் நாடகமாடுகின்றன என்று விமர்சித்தார்.
 
ட்ரம்ப் அமெரிக்காவில்,  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உருவாக ஒபாமாவும் , ஹிலாரி கிளிண்டனும்தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்!
 
ஆக, தமிழகத்திலும் அமெரிக்காவிலும் எதிர்வரும் தேர்தல்களில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவிருக்கிறது! 
 
- ச.ஸ்ரீராம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ