Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈரானுடனான வர்த்தகம், சுற்றுலாவுக்கு சவுதி அரேபியா தடை!

ரியாத்: ஈரானில் உள்ள தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து, ஈரானுடனான விமான போக்குவரத்து, வர்த்தகம், சுற்றுலா போன்றவற்றுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

கடந்த 2-ம் தேதி ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் சவுதி அரேபியா தூக்கு தண்டனை நிறைவேற்றியது. இந்த செயலுக்கு ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் ஈரான், ஈராக் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த போராட்டத்தின் போது அங்கிருந்த அரேபிய தூதரகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதேபோல், மஷாத்தில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்தையும் தீ வைத்து கொளுத்தினர்.

இதனால், ஆத்திரம் அடைந்த சவுதி அரேபியா, ஈரானுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும், ஈரானுடனான விமான போக்குவரத்து, வணிகம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் நாட்டு மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் மெக்கா, மதினா போன்ற இடங்களுக்கு புனித பயணம் வருபவர்கள் எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அதெல்-அல்-ஜூபைர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close