Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்து மீது படையெடுப்போம்... மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள்!

லண்டன்: இங்கிலாந்து மீது படையெடுக்க உள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது கூட்டு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுடன், இங்கிலாந்து படையும் கூட்டுப்படையில் இணைந்தது.

இந்நிலையில்,  இங்கிலாந்துக்காக உளவு பார்த்ததாகக் கூறி 5 இளைஞர்களை சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், கருப்பு முகமூடி அணிந்த தீவிரவாதிகள், 5 பேரை சுட்டுக்கொல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதில் பிரிட்டன் உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் பேசும் தீவிரவாதி, இந்த 5 பேரும் இங்கிலாந்துக்காக சிரியாவில் உளவு பார்த்தவர்கள் என தெரிவிக்கிறார்.

மேலும் அவர், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கிறார். அத்துடன், ''அழிக்க முடியாத சக்தியை டேவிட் கேமரூன் எதிர்த்து நின்றாலும், நாங்கள் எங்களுடைய மதப் போரைத் தொடர்வோம். ஒவ்வொரு எல்லைகளாக உடைத்தெறிந்து எங்களது மத அரசை நிறுவுவோம்" என்கிறார்

இதேபோல், அந்த வீடியோவில் தோன்றிய ஆறு அல்லது ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும், இங்கிலாந்துக்கு மிரட்டல் விடுத்து பேசுகிறார். இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து உள்ள இங்கிலாந்து அதிகாரிகள், வீடியோவில் தோன்றிய நபரின் குரல் பதிவை ஆய்வு செய்து, அவர் பிரிட்டனைச் சேர்ந்தவரா என்பதை உறுதிப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ