Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு சக்கரத்தில் விமானங்கள் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம் (வீடியோ)

ங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிர்மின்கம் விமான நிலையத்தில்தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன.


சில நாட்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் தாக்கியதோடு, மழை கொட்டி தீர்த்தது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே பிர்மின்கம் விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத்தை சந்தித்தன.

குறிப்பாக, பிரஸ்சல்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, காற்று சுமார் 50 கி.மீ வேகத்தில் வீசியதில் விமானம் தரையிறங்க முடியாமல் தள்ளாடியவாறு வந்துள்ளது. ஓடுதளத்தை அடைந்தபோது விமானத்தின் வலதுபக்க சக்கரம் மட்டுமே தரை மீது இறங்கியுள்ளது. சில நொடிகள் அந்த விமானம் ஒரு பக்க சக்கரங்களின் உதவியால் ஓடுதளத்தில் சென்றுள்ளது. சிறிய ரக விமானம் ஒன்று இறங்க முயற்சித்தபோது காற்றின் போக்கில் பறந்து ஓடுதளத்தை விட்டு விலகி செல்லும் நிலை ஏற்பட்டும் விமானி கடுமையாக போராடி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

இதற்கு அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு விமானிகளும் பெரும் போராட்டத்துடன் விமானங்களை ஓடுபாதையில் இறக்கியுள்ளனர். சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேல் எழும்பி பறந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close