Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

63 கி.மீட்டருக்கு ரூ.52 ஆயிரம் வசூலித்த டாக்ஸி நிறுவனம் எது தெரியுமா? (வீடியோ)

கனடா நாட்டில் ’உபெர்’ டாக்ஸியில் பயணம் செய்த நபர் ஒருவருக்கு 125 டாலர் கட்டணத்திற்கு பதிலாக 1100 டாலர் ஓட்டுனர் கோரிய கட்டணம் பயணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மதிப்பில் இது 52,612 ரூபாய் ஆகும்.

எட்மாண்டன் நகரை சேர்ந்த மேத்தியூ லிண்ட்சே என்பவர், கிறிஸ்துமஸ் தினமன்று நண்பர்களுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டருந்தார். இதற்காக எட்மாண்டன் நகரிலிருந்து மில் உட்ஸ் பகுதிக்கு செல்ல, ‘உபெர்’(Uber) சேவையை வழங்கும் டாக்ஸியில் ஏறியுள்ளார். அவருடன் சில நண்பர்களும் சென்றுள்ளனர். முதலில் சம்மர்சைடு பகுதியை நோக்கி சென்ற டாக்ஸி ஓட்டுனர், அங்கு சில நபர்களை இறக்கிவிட்டுள்ளார்.

பின்னர், அங்கிருந்து செயின்ட் ஆல்பர்ட் பகுதிக்கு சென்று அங்கு 2 நபர்களை இறக்கி விட்டுவிட்டு, இறுதியாக கேஸ்டல் டவுன்ஸ் என்ற நகரில் மேத்தியூவை இறக்கி விட்டுள்ளார். ஆனால், இந்த தூரத்திற்கு எவ்வளவு கட்டணமாகும் என மேத்தியூவால் கணிக்க முடியவில்லை. காரை விட்டு இறங்கியதும் ‘எவ்வளவு கட்டணம்?’ எனக்கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஓட்டுனர் ‘மொத்தம் 1,100 டாலர் கொடுங்கள்’ என கேட்டதும் மேத்தியூவிற்கு மயக்கமே வந்துவிடுவதுபோது இருந்துள்ளது.
 

’இல்லையே, இதே வழியாக ஏற்கனவே பயணம் செய்ததற்கு 77 டாலர் தானே கட்டினேன். கி.மீட்டருக்கு 8.9 டாலர் என்றாலும், மொத்தமாக பயணம் செய்த 63 கி.மீட்டருக்கு 125 டாலர் தானே செலுத்த வேண்டும். எதற்காக 1,100 டாலர் கேட்கிறீர்கள்?’ இந்த நகரின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு செல்ல 1,100 டாலரா?’ என கோபமாக பேசியுள்ளார்.

இதற்கான விளக்கத்தை நீங்கள் உபெர் நிறுவனத்திடம் தான் கேட்டுக்கொள்ள வேண்டும் என கூறிவிட்டு 1,100 டாலரை வாங்கிக்கொண்டு ஓட்டுனர் சென்று விட்டார். (இந்திய மதிப்பில் 52,612 ரூபாய்) பலத்த ஏமாற்றம் அடைந்த மேத்தியூ, உடனடியாக உபெர் நிறுவனத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, "கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பரபரப்பான நாட்களில் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படும் என உபெர் ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. சராசரி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை ஓட்டுனர்களுக்கே நாங்கள் வழங்கி விடுகிறோம்" என உபெர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், உபெர் நிறுவனத்தினர் திட்டமிட்டே இவ்வாறு அதிகமாக வசூலிக்கின்றனர் என கருதிய மேத்தியூ,  சட்ட வல்லுனர் ஒருவரை தொடர்புக் கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "பரபரப்பான நாட்களில் கட்டணத்தை உயர்த்தியால் உபெர் நிறுவனம் தற்போது பிரச்னையை சந்தித்து வருகிறது. ஆனால், பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி உபெர் நிறுவனத்தினர் கொள்ளை லாபம் அடைகின்றனர்" என கூறியுள்ளார்.

எனினும், இதுபோன்ற சேவைகளை பயன்படுத்தும் மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும் ஏமாற்றம் அடைந்த மேத்தியூ, இந்த தொழில்நுட்ப கொள்ளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ