Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதி பயங்கர ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்தோம்: வட கொரியா

சியோல்: அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்கிற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே, சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இது சாதாரண நிலநடுக்கம்தான் என்று வடகொரிய மக்கள் நினைத்த நேரத்தில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும், ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.

இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று அறிவித்துள்ளது.

மேலும், "இன்றைய ஹைட்ரஜன் குண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அணு ஆயுத திட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பொறுப்புமிக்க நாடாக நாங்கள் நடந்து கொள்வோம்.

எங்களுடையை இறையாண்மை மீறப்பட்டாலொழிய அவற்றை பிறர்மீது பயன்படுத்த மாட்டோம். மற்றவர்கள் கையில் அவை கிடைக்கும் வகையிலும் அஜாக்கிரத்தையாக இருக்க மாட்டோம்" என்று பரிசோதனைக்கு பின் வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close