Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பறிப்பதா?: ஒபாமாவுக்கு ஜெப் புஷ் எதிர்ப்பு!

வாஷிங்டன்: மக்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகளைப் பறிப்பதா? என்று துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சிக்கு குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜெப் புஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால், அங்கு வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், இந்த நிலைமையை மாற்ற அங்கு துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையில், ''3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும்போது எனக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் உள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க நாம் அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதற்கு மேலும் சாக்கு போக்குகளை சொல்லி சமாளிக்க கூடாது. ஆயுதங்களை தயாரித்து விற்கும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது குறித்து அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜெப் புஷ் கூறும்போது, ''எப்போதெல்லாம் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சட்டத்தை மதிக்கும் நாட்டு மக்களின் உரிமைகளை பறிப்பதில் ஒபாமா குறியாக உள்ளார். குடி மக்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகளைப் பறிப்பதைவிட, குற்றவாளிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களை பறிக்க நடவடிகை எடுக்க வேண்டும்" என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்