Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பைனயில் 3வது இடம் பிடித்த சீன நிறுவனம்!

ஹாங்காங்: உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 3-வது இடத்தை ஹுவேய் என்ற சீன நிறுவனம் முதன்முறையாக பிடித்துள்ளது.

சீனாவில் இயங்கி வரும் 'ஹுவேய்' என்ற நிறுவனம் கடந்த சில மாதங்களாக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த நிறுவனம் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு (2015) மட்டும் 10.8 கோடி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்து இருக்கிறது. இது உலக அளவில் 3-வது இடமாகும். 23.8 சதவீதத்துடன் சாம்சங் முதலிடத்திலும், 13.5 சதவீதத்துடன் ஆப்பிள் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

''மிகக் குறைந்த விலையில் முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் தருவதால் சீன ஸ்மார்ட்போன்களை பலர் விரும்புகிறது'' என ஹுவேய் நிறுவனம் கூறியுள்ளது.

ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கும் முதல் சீன நிறுவனம் 'ஹூவேய்' என்பது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ