Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே வெடிகுண்டுகளுடன் நின்ற கார்!

ஹெராத்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அருகே வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், மசார்-ஐ-ஷெரீப் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான், ஹெராத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அருகே நேற்று (8-ம் தேதி) கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அந்த காரில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை இந்திய தூதர் ஆமர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ''வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் எந்த கருவியும் அந்த காரில் பொருத்தப்படவில்லை. எனவே, அந்த கார், இந்திய தூதரகத்தை தகர்க்கும் நோக்கில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை'' எனக் கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ