Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தன்னை கொல்ல முயன்ற விடுதலைப்புலி போராளியை மன்னித்து ஆசீர்வதித்த சிறிசேனா!

கொழும்பு: தன்னை கொல்ல முயன்று தண்டனை பெற்ற விடுதலைப்புலி போராளியை மன்னித்து ஆசீர்வதித்தார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா.

2005-ம் ஆண்டு இலங்கையின் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக மைத்ரிபால சிறிசேனா இருந்தபோது, அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த சிவராஜா ஜெனீவன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி ஏற்றதன் ஓராண்டு நிறைவு விழா நேற்று (8-ம் தேதி) நடைபெற்றது. இதைமுன்னிட்டு கொழும்பு நகரில் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மைத்ரிபால சிறிசேனா, தன்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சிவராஜா ஜெனீவனுக்கு பொது மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தார். அதோடு, ஜெனீவனை மேடைக்கு அழைத்து, அவருடன் கைகுலுக்கி, தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார்.

மைத்திபால சிறிசேனா இலங்கை அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு விடுதலைப்புலிகளை விடுதலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close