Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2ம் உலகப் போருக்கு பின்னர் முதன்முறையாக ஹிட்லரின் சுயசரிதை வெளியீடு!

பெர்லின்: சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லரின் சுயசரிதையான 'மெய்ன் கேம்ப்' என்ற நூல் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதன்முறையாக ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், முதல் உலகப் போரில் ஈடுபட்டார். 1918-ம் ஆண்டு போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்த அவர், அக்கட்சியின் தலைமை இடத்தை பிடித்தார்.

பின்னர் 1923-ம் ஆண்டு அரசை எதிர்த்து புரட்சியில் ஈடுபட்டார். அந்த புரட்சி தோல்வியில் முடிந்ததையடுத்து, ஹிட்லர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த போது 'மெய்ன் காம்ப்' (எனது போராட்டம்) என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். ஹிட்லரின் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1926-ல் 2-ம் பாகம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஹிட்லரின் சுயசரிதை புத்தகத்தின் மீது ஜெர்மனி நாட்டு நிதி அமைச்சகம் தடை விதித்திருந்தது.

தற்போது அந்த புத்தகத்தின் காப்புரிமை காலாவதியாகி விட்டதையடுத்து, ஜெர்மனியின் வரலாற்று மையம் ஒன்று, விளக்கவுரையுடன் ஹிட்லரின் 'மெய்ன் கேம்ப்' புத்தகத்தை புதுப்பித்தது. இந்த புத்தகம் நேற்று (8-ம் தேதி) முனிச் நகரில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ஜெர்மன் கல்வித்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ''தற்போது விளக்க உரையுடன் வெளியிடப்பட்டுள்ள மெயின் கேம்ப் புத்தகத்தால், தேவையற்ற கட்டுக்கதைகள் முடிவுக்கு வரும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ