Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படியும் ஒரு நாட்டில்... பட்டப்பகலில் கொள்ளையர்களின் அட்டகாசத்தை பாருங்கள்! (வீடியோ)

சுற்றுலா வரும் பயணிகளை பட்டப்பகலில் தாக்கி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து செல்கிறது ஒரு கும்பல். இந்த கொடுமையான சம்பவம் பிரேசிலில் அரங்கேறி வருகிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில்,  சிறுவர்கள் அடங்கிய கொள்ளை கும்பலால் சுற்றுலாப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து தங்க செயின்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில், அவர்களை இந்த கொள்ளை கும்பல் பட்டப்பகலில் தாக்குவதாக கூறப்படுகிறது.

பயணிகளை தாக்கி கொள்ளையடிப்பதை அப்பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர்,  தமது கேமராவில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். கொள்ளையடிக்கும் கும்பலில் இருக்கும் இளைஞர்கள், விலை உயர்ந்த பொருட்களை எப்படி நோட்டமிட்டு பறிக்க வேண்டும் என இளையவர்களுக்கு விளக்கமளிக்கின்றனர்.


இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரியோ நகர் மேயர் கூறுகையில், நகரின் பல பகுதிகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டார். மேலும், இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 8 மாதத்தில் பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close