Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த முயன்றவர் கைது!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த,  காரில் ஆயுதங்களுடன் வந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

ஒபாமா,  போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட  2 உயர் ரக நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’  என்று  பெயரிடப்பட்டுள்ளது.  அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த இளைஞர் ஒருவர் ரகசியமாகத் திட்டமிட்டார்.  ஒபாமாவின் மனைவி  மிச்செல், அந்த  நாய்க் குட்டிகளை வெளியே ’வாக்கிங்’ அழைத்து வருவதையும் அவர்  கண்காணித்து வந்தார்.

இந்நிலையில்,  அந்த இளைஞர் காருடன் நின்று கொண்டிருந்தபோது சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்காட் ஸ்டாக்கெர்ட் என தெரிய வந்தது. வடக்கு டகோடா மாகாணத்தை ஸ்காட் ஸ்டாக்ரெட், தனது காரில்  துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களை வைத்திருந்தார். 

விசாரணையில் ஒபாமாவின் நாய்களில் ஒன்றை கடத்த திட்டமிட்டதாக தெரிவித்ததையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close