Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரிய புகைப்படம் : நஞ்சுக் கொடியில் மலர்ந்த 'லவ்'!

நியூசிலாந்தை சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் எம்மா ஜீன் நோலன், அண்மையில் ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். ஒரு பச்சிளம்  குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அதில்,  'ஸ்வீட் லிட்டில் ஹெர்பரை பூமிக்கு வரவேற்கிறேன்' என பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்தால் ஒரே ஆச்சர்யம். நஞ்சுக் கொடி பிரிக்கப்படாத நிலையில் ஒரு குழந்தையின் புகைப்படம் அது. கட்டிலில் போடப்பட்டிருந்த நிலையில் நஞ்சுக் கொடி 'லவ்' என்ற வார்த்தையை வெளிப்படுத்தும் வகையில், வளைந்து நெழிந்து கிடந்தது. எம்மாவும் அதனை அற்புதமான வகையில் புகைப்படமாக்கியுள்ளார்.  இந்த படம் ஃபேஸ்புக்கில் கடந்த ஜனவரி 2-ம் தேதி முதல் வலம் வந்தது.

நஞ்சுக் கொடி அருவருப்பாக இருக்கலாம். ஆனால், அதனையும் அழகான அன்பான வார்த்தையை உணர்த்தும் வகையில், தெள்ளத் தெளிவாக புகைப்படமாக பதிவு செய்த  எம்மா ஜீன்  நோலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close