Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுக்கழிப்பிடங்களால் விளைந்த விபரீதங்கள்... வரலாறு சொல்லும் பாடம்!

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஐரோப்பிய வரலாற்றில் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்த ஒரு சமூகம்தான் ரோமானியக் கலாச்சாரம். சமூகச் சுகாதாரம் என்ற பெயரில் பொதுகழிப்பறைகளையும், பொதுக் குளியலறைகளையும் நாடெங்கும் அமல்படுத்தினர் ரோமானியர்கள். இதன் மூலம் சுகாதாரமும், பொதுமக்களின் ஆரோக்கியமும் மேம்படும் என்று கருதினர். ஆனால் விளைந்ததென்னவொ விபரீதம்தான். ரோமானியர்களின் இந்த நடவடிக்கையால், நோய்கள் குறைவதற்கு பதிலாக அதிகமானதுதான் மிச்சம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தொல்லியல்துறை ஆய்வாளரான பியர்ஸ் மிட்செல், அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தினார். இதில்,  இன்றும் மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் பின்தங்கிய நாடுகளில், கழிப்பறையின் சுகாதாரத்திற்குப் போதுமான தண்ணீர் சரியான அளவில் கிடைத்தாலே, அவர்களின் உடல்நலமும், சுகாதாரமும், பெருமளவில் அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளார்.

நிலைமை இப்படியிருக்க, 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பொதுக்கழிப்பிடம், பொதுக்குளியலறை என்று கொண்டுவந்த ரோமானியர்களால் எப்படி நோய் அதிகரிக்க பெற்றது? என்ற கேள்வி, பியர்ஸுக்கு தோன்றியது. இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்த விவரங்கள்தான் இவை...
 


* பொதுக்குளியலறைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்களிலுள்ள சுவர்களிலும் தரைகளிலும் தங்கும் ஈரப்பசை, மிதமான வெப்பத்தோடு கலக்கும்போது உருவாகும் சில நுண்ணுயிரிகள், ரோமானியர்களின் பொதுக்கழிப்பிட முறையால் மென்மேலும் உருவாகி பரவத் தொடங்கின.

* இந்த நுண்ணுயிரிகள் மனிதர்களின் உடலில் மட்டுமன்றி, உட்கொள்கின்ற உணவிலும் கலந்து பரவக் கூடியவை. வயிற்றுப்போக்கு, உடல்வலி எனத் தொடங்கி உயிரையே காவு வாங்கக் கூடியவை இந்த நுண்ணுயிர்கள்.

* இந்தப் பொதுக்கழிப்பிடங்களின் வடிகால்,  நேரடியாக விளை நிலங்களின் பக்கம் திருப்பிவிடப்பட்டதால் உணவுப் பயிர்களில் எளிதாகத் தொற்றிக்கொண்ட இந்தக் கிருமிகள்,  ரோமாபுரியெங்கும் பரவி வந்துள்ளன. மனிதக் கழிவுகளை ஆறு மாத காலம் சரியான அளவில் மக்க விட்டபின்,  அவற்றை உரமாகப் பயன்படுத்தலாம் என்ற பண்டைத்தமிழர் அறிவியலை அன்றைய ரோமானியர்கள் கற்றிருக்கவில்லை.

* இவற்றிற்கும் மேலாக, நீர்நிலைகளிலிருந்து பிடித்து வந்த மீன்களை பச்சையாக வெட்டவெளியில் வெயிலில் காய வைத்து,  அவற்றிலிருந்து தயாரித்த மீன் எண்ணெய்களின் மூலம் ஐரோப்பாவையே நோய்க்காடாக மாற்றியிருக்கின்றனர் ரோமானியர்கள்.

இத்தனை விவரங்களையும் பட்டியலிடும் மிட்செல்,  வரலாற்றின் பக்கங்கள் வெகுவாகப் புகழ்ந்து கூறும் ரோமானியச் சுகாதாரம் அத்தனைச் சுகாதாரமானதல்ல என போட்டு உடைக்கிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரோமானியப் பொதுக்கழிப்பிடங்களுக்கும், இன்றையத் தமிழகப் பொதுக்கழிப்பிடங்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு ஒன்றும் இல்லை. அவர்களுக்காவது, அறியாமை என்றொரு சாக்கு இருந்தது; வரலாற்றிலிருந்து பாடம் கற்போமா நாம்?

-ச.அருண்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close